ஜன:28திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் சங்கராமநல்லூர் பேரூராட்சி குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகா கருப்புசாமி துணைத்தலைவர் பிரேமலதா உத்தமராஜ் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கண்ணேஸ்வரி கணேசன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்
வி .தாமோதரன் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் முருகவேல் சக்திவேல் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் பெற்றோர்கள் பள்ளி மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
. முன்னதாக பள்ளி மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி நாட்டிய போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.