ராமநாதபுரம், மே 9-
ஏர்வாடி தர்ஹா 851 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக் கூடு திருவிழா கொடி யேற்றம் நேற்று மாலை நடந்தது. இதில்
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்ஹா 851 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து
பல்லாயிரக்கணக்கான யாத்திரீகர்கள் பங்கேற்றனர்.
இதையொட்டி ஏப். 29ல் தர்ஹா ஹக்தார் குழு நிர்வாகிகள் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் மவுலீது ஓதப்பட்டு சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது. மே 8 ல் அடி மரம் நாடப்பட்டது. ஏர்வாடி முஜாஹிர் நல்ல இபுராஹீம் மஹாலில் இருந்து யானை, குதிரை, ஒட்டகங்களுடன் நேற்று மாலை தொடங்கிய
கொடி ஊர்வலம்
தர்ஹானது வந்தடைந்தது. இதனை தொடர்ந்து
ராமநாதபுரம் மாவட்ட டவுன் காஜி சலாஹூத்தீன் சிறப்பு துவா ஓதினர். இதையடுத்து இரவு 7 மணி அளவில் கொடியேற்றப்பட்டது.
இதில் தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார்.
சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் மே 21 மாலை தொடங்குகிறது நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சந்தனக்கூடு ஊர்வலமாக வந்து மே 22 அதிகாலை தர்ஹாவை வந்தடையும். இதையொட்டி தர்ஹா மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மே 28 மாலை 5 மணியளவில் மவுலீது ஓதி, நெய்ச்சோறு (தப்ரூக்) வழங்கப்பட்டு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. சந்தனக்கூடு திருவிழாவையொட்டி மே 22 ல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கீழக்கரை டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் போலீசார்
பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்தனர்.
ஏர்வாடி தர்ஹா சமூக நல்லிணக்க சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics