மதுரை பிப்ரவரி 27,
மதுரையில் பூமிக்கு அடியில் ஐந்தரை கிலோ மீட்டர் தொலைவில் ரயில் பாதை
மதுரையின் பண்பாட்டு தளங்கள் பாதிக்காத வண்ணம் பூமிக்கு அடியில் ஐந்தரை கிலோ மீட்டர் தொலைவில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது என மெட்ரோ திட்ட மேலாண்மை இயக்குனர் சித்திக் தனது குழுவினருடன் மதுரை மாவட்ட நிர்வாகத்துடன் மதுரை மெட்ரோ திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்திக் கூறுகையில் “மதுரையில் 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 32 கிலோ மீட்டர் தொலைவிற்கு 26 ரயில் நிலையங்களை கொண்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான ஒப்புதல் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 11,368 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மதுரையின் பண்பாட்டு தளங்கள் பாதிக்காத வண்ணம் பூமிக்கு அடியில் ஐந்தரை கிலோ மீட்டர் தொலைவில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து 100 மீட்டர் தள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. மதுரை, கோவை மெட்ரோ இரண்டு திட்டங்களும் சேர்த்து ஒரே திட்டமாக தான் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது, இதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரை மெட்ரோ ரயில்வே வழித்தடம் நீட்டிக்கும் திட்டம் இல்லை, எதிர்காலத்தில் நீட்டிக்கப்படலாம்” என கூறினார்