தீயணைப்பு துறையினரின் போலி ஒத்திகை பயிற்சி தேனி மாவட்டம், ஜூலை -19 தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட வாய்க்கால் பட்டியில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மா.சந்திரகுமார் அவர்களின் அறிவுறுத்தல் படியும் சோ.முருகேசன் உத்தமபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் அவர்களின் முன்னிலையும் தீயணைப்பு துறையினரின் போலி ஒத்திகை பயிற்சி பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது இதில் நீரில் மூழ்கியவரை எவ்வாறு மீட்பது உபகரணங்களை எவ்வாறு கையாள்வது என போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இந்நிகழ்வுக்கு உத்தமபாளையம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்



