தென்தாமரைகுளம் மே 13
குமரி மாவட்டம் மணக்குடி மீனவ கிராமத்தில் வலைகளை உலர வைக்கும் செட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பதிப்பிலான வலைகள் எரிந்து நாசம்.
கன்னியாகுமரி அருகே மேல மணக்குடியில் மீனவர்கள் வலைகளை பின்னுவதற்காக கொட்டகை ஒன்று அமைத்து இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வலை பின்னும் கூடத்தில் திடீரென தீப்பிடித்தது.
கொட்டகையின் மேல்பகுதியில் பிடித்த தீ காற்று வேசமாக வீசியதால் மளமளவென பரவி கொட்டகை முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது. அப்பகுதி மக்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள்.
இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகியது. விபத்து குறித்து சுசீந்திரம் காவல் நிலைய போலீஸார் விசாரனை நடத்தி வருகிறார்கள். எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாராவது தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.