தருமபுரியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் தருமபுரி நகரம், 18 மற்றும் 19 வார்டுகளுக்கு உட்பட்ட பெரியார் சிலை அருகில் திண்ணை பிரச்சாரம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல் ஏற்பாட்டில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு நகர கழகச் செயலாளர் பூக்கடை ரவி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கழக செயலாளர் அன்பழகன் திண்ணை பிரச்சாரத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
சிங்காரம் கழக அமைப்புச் செயலாளர், முல்லைவேந்தன் கழக அமைப்புச் செயலாளர், கோவிந்தசாமி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர், சம்பத்குமார் அரூர் சட்டமன்ற உறுப்பினர், அன்பழகன் கழக விவசாய அணி தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். வருகின்ற 2026- சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும். பொதுமக்களிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை எடுத்துக் கூறி துண்டு பிரச்சாரங்களை வழங்கினார்கள். ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க7.5 சதவீத இட ஒதுக்கீடு, 52. 31 லட்சம் மாணவர்களுக்கு ரூ .7,322 கோடி செலவில் மடிக்கணினிகள், கொரானா ஊரடங்கு காலத்தில் 2.97 கோடி மக்களுக்குஅம்மா உணவகம்கள் மூலம் விலையில்லா உணவு வழங்கியது. ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கியது. உயர்கல்வியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கியது. ஆகிய சாதனைகளை எடுத்துக் கூறி 2026 – சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குகளை சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ,நகர ,ஒன்றிய ,கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.