கோவை ஜூன்: 21
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி அவர்களின் 54 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அரசுமருத்துவ மனையில் உள் நோயாளிகளுக்கு ரொட்டி, பிஸ்கட் வழங்கியும் பொள்ளாச்சியில் பல்வேறு இடங்களில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.கே. பகவதி தலைமையில் நகர தலைவர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் வக்கீல் ரவி, ஜோதிமணி, மாவட்ட பொருளாளர் வெங்கடேஸ்வரா, விசு,மாவட்ட துணைத் தலைவர்கள் மாசிலாமணி, பத்ரகிரி,மோகன்ராஜ்,பாலகுருசாமி,கணகராஜ்,தென்னரசு,கே.பி .எஸ். சுரேஷ் ,அன்சர்,சுப்பு ஆறுமுகம்,மனித உரிமை மாவட்ட தலைவர் பஞ்சலிங்கம் ,ஆர்.டி. ஐ விங் மாநில துணைத்தலைவர் ஜெர்சிலின் ,பொள்ளாச்சி தெற்கு வட்டார தலைவர் செல்வகுமார்,வக்கீல் செந்தில்குமார்,நகர வட்டார நிர்வாகிகள், பிரிட்டோ, கோபால், காளிமுத்து,ஹரிமகாலிங்கம்,வசந்தகுமார். அய்யாசாமி,மூர்த்தி, சிவசாமி,SSR.நடராஜ்,வட்டமலைவேலு,மணிகண்டன்,வென்னிலா ரவி, ரவிசேகர்,கிருஷ்ணமூர்த்தி, அருண் கண்ணையா,தமிழ்செல்வி, சாந்தி,வில்சன்,இளைஞர் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர்கள் சபாபதி மணிகண்டன்,மாணவர் காங்கிரஸ் ஜேம்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.