சுசீந்திரம் ஏப்.30
சுசீந்திரம் அருகே உள்ள புதுகிராமம் காலனியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி 43 இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் உள்ளனர் இவர் மது அருந்தும் பழக்கம் உடையவர் எனகூறப்படுகிறது இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் இதனால் தினம்தோறும் மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து உள்ளார் இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் தனது தாயாரிடம் டீ போட்டு கேட்டுள்ளார் அவர் டீ போட்டு கொடுத்து குடித்துவிட்டு செல்போனுக்கு சார்ஜ் போட்டு கொண்டிருக்கும் பொழுது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அவரது தாயார் தனது மூத்த மகன் சபரி அய்யனாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் உடனடியாக சபரி அய்யனார் தனது தம்பியைகாண வந்து மயங்கி நிலையில் கிடந்த வரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒரு ஆட்டோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சக்கரவர்த்தி இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர் இதுகுறித்து சக்கரவர்த்தியின் அண்ணன் சபரி அய்யனார் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்