போகலூர், அக்.17-
போகலூர் அருகே உள்ள தியாகவன்சேரி கிராமத்தில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு ஆலயத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள நீர்நிலையில் கரைப்பதற்காக ஏராளமானோர் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். முளைப்பாரி உற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் மற்றும் இரவு முழுவதும் ஒயிலாட்டம் பெண்களின் கும்மியாட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி உற்சவ விழாவில் முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஏராளமான பெண்கள் உட்பட கிராமத்தினர் முக்கிய வீதிகள் வழியாக நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நீர் நிலையில் கரைப்பதற்காக முளைப்பாரி தூக்கி வந்தனர்.
மும்மாரி மழை பெய்து விவசாயம் செழிக்கவும் மக்கள் நோய்கள் இன்றி ஆரோக்கியமாக மன நிம்மதி உடன் வாழவும் வேண்டி கொண்டனர்.
முளைப்பாரி உற்சவ
விழாவிற்கான ஏற்பாடுகளை தியாகவன்சேரி முத்துமாரியம்மன் கோவில் விழா கமிட்டியை சேர்ந்த மாப்பிள்ளைச்சாமி, சாத்தையா, தர்மலிங்கம், பாஸ்கரன்,ரவி, ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.