மதுரை ஏப்ரல் 18
மதுரை மாவட்ட
ஆட்சியர் மா.சௌ.சங்கீதா இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மதுரை மாவட்ட
விவசாயிகளின் குறைகளைத் தீர்க்கும் வண்ணம், ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில்
2025 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் -25-04-25 அன்று காலை 10.00. மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரிடையாக நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில், விவசாயம் தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள்.
எனவே
விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக, மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.


