மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் நிவாரணம் உள்ளிட்ட நலத்திட்டங்களை விவசாயிகள் பெற வேண்டும் என்றால் அரசியல் வழங்கப்படுகின்ற அடையாள அட்டை பெற வேண்டும் இதற்கு குத்தகை நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை மறுக்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் ஆதீனம் மற்றும் மடங்கள் கோயில்களுக்கு சொந்தமான சாகுபடி செய்யும் விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக 25 சதவீத விவசாயிகள் கூட அடையாள அட்டை பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனையின்றி அடையாள அட்டை வழங்க வேண்டும், 50000 ஏக்கரில் செயல்பட்டுள்ள உளுந்து பயிறு செடிகள் மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு உரிய வழிகாட்டுதல் வழங்கி நிவாரணம் வழங்க வேண்டும், ஆதீனங்களுக்கு சொந்தமான குத்தகை விவசாயிகளின் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தி அறநிலையத்துறை கண்காணிப்பில் கொண்டு வந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் P.R.பாண்டியன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் விஸ்வநாதன் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விவசாயிகள் சங்கம், கோவி. நடராஜன் சீர்காழி தொகுதி செயலாளர், வேட்டங்குடி பி.சீனிவாசன் தஞ்சை காவிரி ஒருங்கிணைப்பு குழு, ராமலிங்கம் தென்னிந்திய நதிகள் சங்கம் இயற்கை விவசாயி, முருகன் கரும்பு விவசாயி, மு. ராஜேந்திரன் மாவட்டத் தலைவர் மூ மு க. மற்றும் தஞ்சை காவிரி ஒருங்கிணைப்பு குழு, தேசிய நதிநீர் இணைப்பு சங்கம், டெல்டா பாசனதாரர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பொறுப்பாளர்கள் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பி ஆர் பாண்டியன், குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள் தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக வரும் காலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நிவாரணம் வழங்கப்படவில்லை, தமிழக அரசு அறிவித்த இடுபொருள் நிவாரணம் வழங்கவில்லை, இதனை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அரசை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics