திருப்பத்தூர்:மே:16
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சி வேல்முருகன் வட்டத்தில் பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியானது திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலைமையில் நடைபெற்றது. கந்திலி கூட்டுறவு சார் பதிவாளர் தர்மேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர்கள் முருகேசன், முரளி கிருஷ்ணன், பொது விநியோக திட்டம் துணைப் பதிவாளர் சம்பத், மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன், ஒன்றிய குழு உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் எலவம்பட்டி முழு நேர நியாய விலைக் கடை 883 குடும்ப அட்டைகள் செயல்பட்டு வருகிறது.
வேல்முருகன் வட்டம் பகுதி மக்கள் இக்கடையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் அதிகமான தொலைவில் இருந்து பொருட்களை வாங்கி வரும் சூழல் இருந்தது. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை வைத்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் சீரிய முயற்சியில் வேல்முருகன் வட்டம் பகுதியில் நியாய விலை கடை திறப்பதற்கு காரணமாக இருந்தார்.
புதிய நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி திறந்து வைத்து பேசுகையில், நீண்ட காலமாக வைக்கப்பட்ட கோரிக்கையை செயல்படுத்தப்பட்டது இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பெரும் சிரமம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இந்த பகுதியில் உள்ள மக்கள் ஏழை நடுத்தர குடும்பத்தினை சேர்ந்தவர்கள் என்பது தகவலின் பேரில் தெரிய வருகிறது. இந்த பகுதி நேர கடையானது பிரதி வாரம் செவ்வாய் மற்றும் வியாழன் நாட்களில் செயல்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், ஆத்ம குழு தலைவர் முருகேசன், ஒன்றிய குழு துணை தலைவர் மோகன், கூட்டுறவு சார் பதிவாளர் கோகிலா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சி இறுதியில் ஆதியூர் கூட்டுறவுத்துறை குமார் நன்றி உரை வழங்கினார்.