கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 31
கரூர் மாவட்டத்திற்கான விரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளுக்கினங்க,
கரூர் மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் 1500 -க்கு அதிகமான வாக்காளர்கள் இருப்பின் அதனை இரண்டாக பிரித்து புதிய வாக்குச்சாவடியை ஏற்படுத்துதல், தேவைப்படின் வாக்குச்சாவடிகளில் அமைவிடம் மாற்றம் செய்தல், கட்டிட மாற்றம் செய்தல் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் ஆகிய வாக்கு சாவடிகளை மறுவரையறை செய்தல் பணிகள் நடைபெற உள்ளது.
இதனையொட்டி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மீ.தங்கவேல் தலைமை தாங்கினார்.
அப்போது 2025 ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டார். மேலும் வாக்குச்சாவடிகளின் மறு வரையறை தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் தெரிவிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளும் தெரிவிக்கப்பட்டது.
இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, மாநகராட்சி ஆணையர் சுதா, வாக்காளர் பதிவு அலுவலர்கள் முகமது பைசல் (கரூர்), தனலட்சுமி (குளித்தலை) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



