கருங்கல், செப்- 27
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 113- வது பிறந்தநாளையொட்டி கருங்கல் ராஜீவ் காந்தி ஜங்ஷனில் நேற்று (26-ம் தேதி) நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பினுலால் சிங் தலைமை வகித்தார்.
கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கிள்ளியூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் என்.ஏ. குமார், கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் டைட்டஸ், ஜார்ஜ் ராபின்சன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.