முதுகுளத்தூர்,
அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ் சார்பில் போதை பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு
பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர்
ரஜியாபானு தலைமையில் என்.எஸ்.எஸ்
திட்ட அலுவலர்
மங்களநாதன். முன்னிலையில்
நடைபெற்றது.
நிகழ்வில்
முதுகுளத்தூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு சார்பு ஆய்வாளர்
சுரேஷ்குமார்
சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விழா நிறைவில் பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி
நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.