பூதப்பாண்டி – நவ 17
பூதப்பாண்டியை அடுத்துள்ள திட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (38) இவர் திட்டு விளைவேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஐந்து வருடமாக தலைவராக இருந்துள்ளார் நேற்று முன்தினம் இவர் துவரங்காட்டிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது பைக்கிற்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு வரும் போது அருகிலுள்ள டாஸ்மார்க் கடை அருகே அவரது நண்பர் முத்துகுமாருக்கும், ஈத்தாமொழியை அடுத்த ஆத்திக்கடை பகுதியை சேர்ந்த வாலிபர் நவீன் (23) இருவரும் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர் இதை பார்த்த ஆனந்த் இருவரையும் சமாதான படுத்தி அனுப்பி விட்டு சென்றுள்ளார் இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் ஆனந்து துவரங்காடு பகுதியிலுள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் மருத்து வாங்க சென்ற போது அங்கு வந்த நவீன் இவரிடம் நேற்று ஏன் என்னை விலக்கி விட்டாய் என்று கேட்டு தான் வைத்திருந்த அரிவாளால் ஆனந்தினுடைய கழுத்தில் வெட்டுவதற்க்கு ஓங்கியுள்ளார் அவர் குனிய வே அரிவாள் வெட்டிலிருந்து தப்பினார் இந்த சம்பவத்தை பார்த்த அருகிலுள்ள நபர்கள் ஓடி வரவே நவீன் கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக ஆனந்த் பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் அடிப்படையில் போலீசார் நவீன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்