ஈரோடு ஜன 14
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் முதல் கட்ட பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 237 வாக்குச்சாவடி மையங்கள் அல்லாமல் 20 சதவீதம் கூடுதலாக (ரிசர்வ்) சேர்த்து 284 முதன்மை அலுவலர்களும், 284 முதல் நிலை அலுவலர்களும், 284 இரண்டாம் நிலை அலுவலர்களும், 284 மூன்றாம் நிலை அலுவலர்களும், மேலும், 1200 வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளுக்கு 58 நான்காம் நிலை அலுவலர்கள் என மொத்தம் 1194
அலுவலர்கள் பணியாற்றஉள்ளனர்.
மேற்படி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு ஈரோடு இரங்கம்பாளையம் ஆர்.ஏ.என்.எம் கலை அறிவியல் கல்லூரியில்
திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையர் மணிஷ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.