ஈரோடு, ஜன 9
ஈரோடு மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர் தல் அதிகாரியுமான ராஜகோபால் கன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது . அரசு விடுமுறை தினங்களை தவிர மற்ற நாட்களில் 17 ந் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் அதன்படி பொங்கல் பண் டிகை விடுமுறை இருப்பதால் 10-ந்தேதி, 13 ந் தேதி, 17-ந்தேதி ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்.
18-ந்தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக் கிறது. 20-ந்தேதி வரை வேட்பு
மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5- தேதி இடைத்தேர்தல் நடக்கிறது ஓட்டு எண் ணிக்கை 8-ந் தேதி நடைபெ றும் சித்தோடு அரசு என்ஜி னீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறு கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி யில் மொத்தம் 3 லட்சத்து 26 ஆயிரத்து 636 வாக்காளர்கள் உள்ளனர். 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் தொடர் பான புகார்களை தெரிவிக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும், மாநகராட்சி அலு வலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும். மேலும், சி-விஜில் செயலி மூலமாகவும் பொதுமக்கள் பொது மக்கள் புகார் அளிக்கலாம். 1950 என்ற இலவச எண்களில் தொடர்பு கொள் ளலாம்.
ஈரோடு சட்ட மன்ற தொகுதிக்கு மட்டும் தேர்தல் விதிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது மற்ற தொகுதிகளில் விதிமு றைகள் அமலுக்கு வராது தேர்தலில் விதிமீறல் ஏற்படு வதை தடுக்க 3 தேர்தல் பறக்கும் படைகள், 3 நிலை கண் காணிப்பு குழுக்கள். ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வையாளர் குழு, ஒருதணிக்கைகுழு என மொத்தம் 5வகையான குழுக் கள் செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது ஈரோடு மாநகராட்சி ஆணையாள ரும்.ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியு மான மனிஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் உடனிருந்தனர்.