தேனி மாவட்டம், ஜூலை – 23
தேனி மாவட்டம், உத்தமபாளையம் நன்செய் தன்னார்வ அமைப்பின் சார்பாக தேனி மாவட்ட அளவில் நடத்திய குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு “என் சுவாச மரமே” காணொளி அனுப்பும் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்வு H.K.R.H கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது
இந் நிகழ்வில் திரு.முஹம்மது மீரான் (president) H.K.R.H கல்லூரி திரு.சத்தியமூர்த்தி வழக்கறிஞர் திருமதி.வாழ்வரசி பாண்டியன் பச்சை வாழ்வு இயக்கம் திரு.ஜெயசந்திரன் தலைவர் உத்தமபாளையம் நகர் நலச்சங்கம திரு.ஆரோக்கியராஜ் தலைமையாசிரியர் திரு.லட்சுமணன் அறநல்லுலகம் பொதுநல அறக்கட்டளை திரு.ரவிச்சந்தின் சமூக ஆர்வலர் திம்மரச நாயக்கனூர் தேனி வாசவி கிளப் மற்றும் ஆண்டிபட்டி வாசவி கிளப் நிர்வாகிகள் குழந்தைகளுக்கான பரிசுகளை வழங்கினார்கள் பின்பு நன்செய் அமைப்பாளர் நிகழ்வு சிறப்பாக நடைபெற இடம் கொடுத்த கல்லூரி நிர்வாகத்துக்கும் சான்றிதழ் மற்றும் பிளக்ஸ் உதவிய திரு.சரணவக்குமார்(Lovely Flex) மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் ஏற்பாடு செய்த தன்னார்வலர் லோகேஷ் குமார் அவர்களுக்கும் களத்தில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தார்