நாகர்கோவில் ஜூன் 11
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு கல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-25 க்கான வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகம் மற்றும் பள்ளியிலேயே ஆதார் அட்டை மற்றும் அஞ்சலக வங்கி கணக்கு திட்டத்தையும் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 3-ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் நீட் விலக்கு பிரச்சனை தமிழக அளவில் பிரச்சனையாக இருந்தது தற்போது தேசிய பிரச்சனையாக மாறியுள்ளதாகவும் விரைவில் நல்ல முடிவு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.