சென்னை, நவ-13,
இன்டர்நேஷனல் இஞ்சினியரிங் சோர்சிங் ஷோ என்பது சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியாகும். பத்தாண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தக் கண்காட்சிகளில், இதுவரை 3,400 இந்திய உற்பத்தியாளர்கள் காட்சிபடுத்தியுள்ளனர். 86,000க்கும் மேற்பட்ட சர்வதேச விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர். இதன்மூலம், 7,000க்கு மேற்பட்ட நேரடி தொழில் தொடர்புகள் ஏற்பட்டு, தொடர்ச்சியாக சர்வதேச வர்த்தக உறவுகள் உருவாகியுள்ளன. 150க்கு மேற்பட்ட கருத்தரங்குங்கன் மூலம் புதுமையான 150க்கு மேற்பட்ட பொறியியல் பொருட்களின் பிரிவுகள் காட்சிப்படுத்தப்பட்டு, இந்திய உற்பத்தித் துறையின் பன்முகத் திறன் வெளிப்பட்டுள்ளது.
இதுவரையில் 14 நாடுகளைச் சேர்ந்த 38 சர்வதேச கொள்முதல் சந்திப்புகள் நடத்தப்பட்டதன் மூலம், சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா பல முன்னேற்றங்களை கண்டுள்ளது.
இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில், இ.இ.பி.சி.யின் தலைவர் தஅருண் கரோடியா பேசும்போது:- 2017, 2018, 2019, 2020, 2023 ஆண்டுகளில் ஒரு கண்காட்சியும், 2024 ஆண்டில் இருமுறை ஐ.இ.எஸ்.எஸ். கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. மேலும், சென்னையில் இந்த கண்காட்சி 5வது முறையாகவும், தமிழ்நாட்டில் இதுவே 7வது முறையாகவும் நடைபெறுகிறது.
வருகின்ற நவம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில், சென்னை டிரேட் சென்டரில் நடைபெற இருக்கும் இந்தக் கண்காட்சியானது, இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய பொறியியல் கொள்முதல் கண்காட்சியாகும்.
என்றார்.
மேலும் 2வது முறையாக கர்நாடகம், ஹரியாணா, குஜராத், உத்தரப்பிரதேசமும், நான்காவது முதல் முறையாக மேற்குவங்கமும் பங்கேற்கின்றன .
மேலும் இக்கண்காட்சியில் 100 பொறியியல் கருவிகள், மூன்று நாட்களுக்கு காட்சிக்கு வைக்கப்படும் என்று இ.இ.பி.சி.இந்தியாவின் மண்டல தலைவர் (எஸ்.ஆர்.) திரு. ராமன் ரகு தெரிவித்தார்.