வேலூர் 11
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் கிராமத்தில் அமைத்துள்ள ஏரியின் பரப்பளவு 13 ஹெக்ட்டர் 55.5.எர் (33 ஏக்கர்). இந்த ஏரி பஞ்சாயத்து யூனியன் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த எரியின் மூலம் வளத்தூர் கிராமத்தில 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. கிராமத்தின் குடிநீர் ஆதாரமாக உள்ளது.கடந்த 3, ஆண்டுகாலமாக பாலாற்றில் தண்ணீர் வந்தும் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவில்லை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது விவசாய நிலங்கள் வீட்டுமனை பிளாட்டாகமாறி உள்ளன.ஏரியை அப்பகுதியில் உள்ள நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள். இதனால் எரியின் பரப்ப ளவூ குறைந்து குட்டை போல் உள்ளது.ஏரியை அளவீடு செய்து,ஆக்கிரமைப்பை அகற்றி, ஏரியை ஆழப்படுத்தி,கரையை பலப்படுத்தி, ஏரிக்கு வரும் வரத்து கால்வாய், மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்களை சீர்திருத்தி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



