கோவை ஆகஸ்ட்:08
கோவை கொடிசியா சார்பாக ஏழாவது எடிஷன் எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சி ஆகஸ்ட் 9 ந் தேதி துவங்கி நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் எனும் கொடிசியா அமைப்பினர் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் தொழில் துறை என பல்வேறு துறை சார்ந்த கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் மின் துறை சார்ந்த எலக்ட்ரோ டெக் எனும் கண்காட்சியை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றனர்.
அதன் படி இந்த ஆண்டு ஏழாவது எடிஷனாக நடைபெற உள்ள எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது.
கொடிசியா தலைவர் கார்த்திகேயன்செயலாளர் யுவராஜ் மற்றும் எலக்ட்ரோ டெக் கண்காட்சியின் தலைவர் பொன்ராம் துணைதலைவர் கோவர்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.