மதுரை ஜூன் 18,
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டத்தை சார்ந்த மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை பொறியாளர்/மதுரை மின்பகிர்மான வட்டம் அவர்களால் இன்று ஜூன் 18 ந்தேதி காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை செயற்பொறியாளர் திருமங்கலம் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளதால் திருமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது மின் விநியோக குறைகளை நேரில் சென்று தெரிவித்து பயன்பெறலாம் என்று மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பொறிஞர் .எஸ்.மங்களநாதன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.