புதுக்கடை, டிச. 24 –
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (58). இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். சம்பவ தினம் இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மொட்டை மாடியில் பிரஷர் வாஷிங் மெஷின் மூலம் சுவரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது மிஷினில் இருந்து மின்சாரம் எதிர்பாராதமாக தாக்கியதில் மாடியில் இருந்து ஜெயக்குமார் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து மயங்கி கிடந்தார்.
அவரை உடனடியாக மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெயக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


