சிவகங்கை ஜூன் – 29
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருது பாண்டியர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச் சந்திரன் கல்விக்கடனை வழங்கினார்.
இதில் முன்னோடி வங்கியின் மேலாளர் பிரவீன்குமார் கல்விக் கடன் பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் விரிவாக பேசினார். இதனைத் தொடர்ந்து பயன்பெற்ற மாணவ , மாணவியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வங்கி நிர்வாகம் சார்பில் உரிய விதிமுறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டு கல்வி கடன் வழங்கப்பட்டது.