தர்மபுரியில் 24 மனை தெலுங்கு செட்டியார் தலைமை சங்கம் சென்னை மற்றும் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி 24 மணி தெலுங்கு செட்டியார் சமூக திருமண தகவல் மையம் இணைந்து நடத்திய 2024 ஆம் ஆண்டு கல்வி பெருவிழா நடைபெற்றது .இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் திண்டுக்கல் கொடைவள்ளல் நடராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10ஆம், 12ஆம் வகுப்பில் 1ஆம், 2ஆம் ,3ஆம் மதிப்பெண் கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார் .இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ஸ்கூல் பேக், லஞ்ச் பாக்சும், முதியோர்களுக்கு இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட்டது.



