நாகர்கோவில் ஏப் 21
கன்னியாகுமரி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வெகு சிறப்பாக நடைபெற்ற ஈஸ்டர் பெருவிழா. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டாரில் சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் இயேசு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசு வாழ்த்து பாடினர்.
இயேசு கிறிஸ்து, புனித வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று புனித பைபிளில் கூறப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, மூன்றாம் நாள் ஈஸ்டர் பெருநாள் பண்டிகை உருவானது.
இயேசுவின் சிலுவைப்பாடுகளை உணரும் விதமாக 40 நாட்கள் தவக்கால வாழ்க்கை மேற்கொண்ட கிறிஸ்தவ மக்கள் இயேசு உயிர்த்தெழுந்த திருநாளை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடினர்.உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நள்ளிரவு தேவாலயங்களில் நடைபெற்ற இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்று ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர். அந்த வகையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித சவேரியார் தேவாலயத்தில் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள்
ஆண்கள் ,பெண்கள்,சிறுவர்கள் என ஏராளமானோர் புத்தாடை அணிந்து வந்து தேவாலயங்களில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் – இயேசு உயிர்தெழுந்தல் நிகழ்வு மெழுகுவர்த்திகள் ஏற்றியதன் மூலம் பிராந்தனைகளும். திருப்பலிகளும் நடைபெற்றது. பின்னர் ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.