தருமபுரி நகராட்சி இரண்டாவது வார்டு மதிகோண் பாளையம் பகுதியில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 34 லட்சம் மதிப்பீட்டில் உலர் கழிவு பிரித்தால் மையம் நுண்ணுயிர் உரக்கிடங்கில் மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதி கோண் பாளையம், காமாட்சி அம்மன் தெரு, கோட்டை, டேகிஸ் பேட்டை,
குப்பாண்டி தெரு பகுதிகளை உள்ளடக்கிய 5 ஆயிரம் வீடுகளில் இருந்து மக்கம், மக்காத குப்பைகள் தரம் பிரித்து நுண் உரக்கிடங்கு மையத்திற்கு எடுத்து வந்து திடக் கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தினசரி 2 டன் மக்கும் குப்பைகளும், 1 டன் மக்காத குப்பைகளும் சேகரிக்கப்படுகிறது. இதில் 400 கிலோ மறு விற்பனைக்கு ஏதுவான பிளாஸ்டிக், காகித அட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள மறு விற்பனை, மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகள் மாதந்தோறும் சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக அனுப்பி வைக்கப்படுகிறது. வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் ஈர காய்கறி கழிவுகள் எந்திரம் மூலம் அரைக்கப்பட்டு இயற்கை உரமாக தயாரிக்கப்படுகிறது. இந்த உரம் தயாரிக்கும் மையத்தை மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் பார்வை விட்டு ஆய்வு செய்தார். இந்த உரம் தயாரிக்கும் மையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். தொடர்ந்து தருமபுரி உழவர் சந்தைக்கு அருகில் உள்ள ஆவின் பால் குளிரூட்டுமையத்தில் பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இலக்கியம்பட்டி ரேஷன் கடையை ஆய்வு செய்த ஆட்சியர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருள்களை பரிசோதித்து அதன் தரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அதியமான் கோட்டத்தில் வள்ளல் அதியமானின் வாழ்க்கை வரலாற்று ஓவியங்களை ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். இந்த ஆவின் போது நகராட்சித் தலைவர் லட்சுமி, ஆணையாளர் சேகர், பொறியாளர் புவனேஸ்வரி ,நகர் நல அலுவலர் லட்ஷிய வர்ணா, சுகாதார அலுவலர் ராஜரத்தினம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.



