மதுரை ஆகஸ்ட் 13,
மதுரை மாவட்டம் காமராசர் பல்கலைகழக கல்லூரி வளாகத்தில் “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” கல்லூரி மாணவ-மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு). மு.பூமிநாதன் (மதுரை தெற்கு). உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.வைஷ்ணவி பால், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட ஊராட்சித்தலைவர் சூரியகலா கலாநிதி ஆகியோர் உடன் உள்ளனர்.