கம்பம். 3.
தேனி மாவட்டம் கம்பத்தில் தம்பிரான் கவுடர்கள் இளைஞர்கள் நல அறக்கட்டளை நடத்தும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு இரண்டாம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது கம்பம் வ உ சி திடலில் இருந்து 13 கிலோமீட்டர் என்.டி.பட்டி சுருளிப்பட்டி ஜங்ஷன் மீண்டும் உ சி திடல் வந்தடைதல் ஆண்களுக்கு முதல் பரிசு பத்தாயிரம், இரண்டாம் பரிசு 7000, மூன்றாம் பரிசு 5000, பெண்களுக்கு வ உ சி திடலில் தொடங்கி கேகே பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை தொலைவு 5 கிலோ மீட்டர் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசு 5000 இரண்டாம் பரிசு 3000 மூன்றாம் பரிசு 2000 என வழங்கப்பட்டது. இந்த போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை தம்பிரான் கவுடர்கள் இளைஞர்கள் நல அறக்கட்டளை நிர்வாகிகள் தலைமை தாங்கி நடத்தினர். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா. இராமகிருஷ்ணன் கம்பம் நகர்மன்ற தலைவர் வணிதா நெப்போலியன், வழக்கறிஞர் துரைநெப்போலியன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள், சான்றிதழ் வழங்கினர். போட்டியில் முதல் பரிசை கம்பத்தை சேர்ந்த ஹரிஷ் தட்டி சென்றார் இரண்டாம் பரிசை சின்னமனூர் ஷரண்குமார் தட்டிச்சென்றார் மூன்றாம் பரிசினை தென்காசியை சேர்ந்த கண்ணன் தட்டி சென்றார்.முதல் 10 நபர்களுக்கு ஆயிரம் வீதம் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கு கம்பம் தேனி, திண்டுக்கல், மதுரை, ஆண்டிபட்டி, தென்காசி, திருநெல்வேலி, ஊட்டி, என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது தனித் திறமையினை வெளிப்படுத்தினர். மேலும் வெளியூரில் இருந்து வந்த நபர்களுக்கு தங்கும் வசதியும் ஏற்பாடு செய்து கலந்து கொண்ட அனைத்து வீராங்கனைகளுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இந்த விழாவில் கம்பம் தெற்கு, வடக்கு காவல் நிலைய போலீசார் ஏராளமானோர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வீரர் வீராங்கனைகளை ஊக்கவித்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை கம்பம் தம்பிரான் கவுண்டர்கள் இளைஞர்கள் நல அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.