நாகர்கோவில் செப் 7
அனுமதி பெற்ற மதுக் கூடங்களைத் தவிர இதர கடைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் மது குடிப்போா் மீதும், குற்றச் செயல்களுக்கு இடமளிப்போா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அழகு மீனா எச்சரிக்கை. இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் அனுமதி பெற்ற மதுக் கூடங்களில் மட்டுமே மது குடிக்க வேண்டும். பொரித்த இறைச்சி, மீன் விற்பனைக் கடைகள், உணவகங்கள், அசைவ உணவு விற்கும் கடைகள், பெட்டிக் கடைகளில் மது குடிக்க அனுமதியில்லை. மீறி அத்தகைய இடங்களில் மது குடிப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றச் செயல்களுக்கு இடமளிப்போருக்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இதுதொடா்பாக மாவட்டம் முழுவதும் வட்டாட்சியா் நிலையிலான அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொள்வா். தங்களது பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாகத் தெரியவந்தால் பொதுமக்கள் 81229 30279 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம். அவா்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என அந்தச் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.