தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புளியங்குடி கிராமத்தில் உள்ள புத்தூர் முதன்மை வாய்க் காலில் மேற்கொள்ளப்படும் தூர் வாரும் பணியை தமிழக அரசு நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார்
புத்தூர் முதன்மை வாய்க்காலில் 5 கி. மீ. தொலைவுக்கு பொக்லின் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப் படும் தூர் வாரும் பணியை பார்வையிட்ட அவர் தெரிவித் தாவது:
தஞ்சாவூர் தென் பெரம்பூர் கிராமத்தில் வெண்ணாறு, வெட்டாறு தலைப்பில் பிரியும் வடவாறு 64 கி.மீ தொலைவுக்கு சென்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள எளவனூர் வரை பாய்கிறது. இந்த வடவாறில் இடது கரையில் பிரியும் புத்தூர் முதன்மை வாய்க்கால் 11.5 கி.மீ தொலைவிற்கு செல்வதன் மூலம் 5,851 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த வாயவாய்க் காலில் 5 கி.மீ. தொலைவுக்கு நீர் வழிப்போக்கில் மண் திட்டுகளும் காட்டாமணக்கு செடிகளும் அடந்து காணப்படுவதால், கடைமடை பகுதி வரை பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது
எனவே, இந்த வாய்க்காலில் பொக்ளின் இயந்தரம் மூலம் நாணல், காட்டாமணக்கு செடிகளை அகற்றி நீர்வழிப் போக்கை சீரமைக் க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் உடையார் கோயில் கொக்கேரி, அம்மாபேட்டை ,புத்தூர் புளியங்குடி, குச்சிபாளையம் ஆகிய கிராமங்கள் பயன் பெறும் என்றார் அவர்
இந்த ஆய்வின் போது திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார், தஞ்சாவூர் கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், தஞ்சாவூர் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறி யாளர்கள் ரத்தினவேலு, சித்ரா உள்ளிட்ட உடன் இருந்தனர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகள்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics