மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தருமபுரி மாவட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலினை -2025 மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கவிதா. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இரா.க.கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் இரா.காயத்ரி, இரா.வில்சன் ராஜசேகர், தேர்தல் தனி வட்டாட்சியர் அ.அசோக்குமார், அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.



