தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், துணை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் வெளியிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்ததாவது
தென்காசி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம்/ மாறுதல் தொடர்பாக தொடர் திருத்தம் – 2024 நடைபெற்றதை தொடர்ந்து 17.03.2024 முதல் 24.09.2024 வரை தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்றத்தொகுதி வாரியாக படிவங்கள் பெறப்பட்டு கீழ்க்கண்டவாறு இறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல்
தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வெளியிடப்படுகிறது.தென்காசி மாவட்டத்தில் 01.01.2025 நாளை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025 – 29.10.2024 முதல் 28.11.2024 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்யும் பொருட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய நான்கு நாட்களில் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடத்தப்படும். மேற்படி முகாம்களில் வரைவு வாக்காளர் பட்டியல்கள் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது பெயர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு படிவம் 6-ம் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ம் பதிவினை மாற்றம் செய்ய படிவம் 8-ம் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.. இவ்வாய்ப்பினை பொது மக்கள்/ வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் லாவண்யா (தென்காசி), கவிதா (சங்கரன்கோவில்), வட்டாட்சியர் (தேர்தல்) ஹென்றி பீட்டர், வருவாய் வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.