திண்டுக்கல் ஸ்ரீ அறக்கட்டளையின் சார்பாக மூலிகை தாவரங்களின் விளைச்சல் குறித்த ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சி புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு
திண்டுக்கல் ஸ்ரீ அறக்கட்டளையின் தலைவர் ஆனந்தி ராஜ்குமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக
தேசிய மூலிகை வளர்ச்சி வாரியத்தின் ஆலோசகர் முனைவர ரா. முருகேஸ்வரன்
கலந்து கொண்டு cultivation and commercialization of Medicinal Plants and Ensuring Farmers Welfare” என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது , திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 30 பள்ளிகளுக்கு மூலிகை செடிகள் மற்றும் மரக்கன்றுகளை திண்டுக்கல் ஸ்ரீ அறக்கட்டளையின் மூலம் வழங்க உள்ளோம். மேலும் பள்ளிகளில் மூலிகை செடி மற்றும் மரக்கன்றுகளை எவ்வாறு பராமரிப்பில் உள்ளது என்பதை நாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்வோம். மேலும்
விவசாய நிலங்களில் மூலிகைச் செடி வளர்ப்பது குறித்தும், அதனை பராமரிப்பது குறித்தும்,
அரசு வழங்கும் மானியங்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார் .நிகழ்ச்சியில் திண்டுக்கல் ஸ்ரீஅறக்கட்டளையின் தலைவர் திண்டுக்கல் ஆனந்தி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய மூலிகை வளர்ச்சி வாரியத்தின் ஆலோசகர் முனைவர் ரா. முருகேஸ்வரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் ஸ்ரீ அறக்கட்டளையின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.