தருமபுரி மே. 13
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் தென்கரைக்கோட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.கடத்தூர் ஒன்றிய செயலாளர் மா.லியாகத் வரவேற்றார்.மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் பி.எம்.ராஜாமணி,மாவட்ட துணை செயலாளர் சி.பட்டுராஜா, ஒன்றிய செயலாளர்கள் மா.முருகேசன், வே.வேலாயுதம்,மாவட்ட விவசாய அணி வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் கோ.இராமதாஸ்,மாவட்ட அவைத்தலைவர் இரா.குணசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்கள்.
இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசு புறம்போக்கு நிலங்களில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் தென்கரைக்கோட்டை பகுதி மக்களுக்கு அரசு உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி முதல் தென்கரைக்கோட்டை வழியாக மொரப்பூர் வரை உள்ள தார் சாலையை 4 வழி சாலையாக மாற்ற வேண்டும்.
மொரப்பூரிலிருந்து தென்கரைக்கோட்டை வழியாக பாப்பிரெட்டிப்பட்டிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். தென்கரைக்கோட்டை முதல் கோபிநாதம்பட்டி கூட்ரோடு வரை உள்ள தார் சாலையை அகலப்படுத்த வேண்டும்.கடத்தூர் ஒன்றியத்தை 2 ஆகப் பிரித்து தென்கரைக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய ஒன்றியத்தை அறிவிக்க வேண்டும். என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஜோதி நன்றி கூறினார்.