திமுக தலைமை கழக உத்தரவின் படி தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவில் நகரத்தில் 16வது வார்டு புதுமனை 5ஆம் தெரு பகுதியில் இல்லம் தோறும் மாணவர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். மாநில மாணவரணி செயலாளர் ராஜிவ் காந்தி கலந்து கொண்டு இல்லம் தேடி மாணவரணி சேர்க்கை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் திரளான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். இதில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி,
நகர அவை தலைவர் முப்பிடாதி, மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சரவணன், கார்த்தி, ஐ டி விங் சிவாஜி, வக்கீல் நேரு மற்றும் வீராசாமி, வேல்சாமி, மாரி, ஜெயகுமார், இஸ்மாயில், மாணவரணி வெங்கடேஷ், பாரதிராஜா, கவுன்சிலர் புஷ்பம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



