கிருஷ்ணகிரி,ஏப்.15- கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் கிருஷ்ணகிரியை அடுத்த வேட்டியம்பட்டி காமராஜ் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.சின்னராஜ் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் ஒரே கட்சி தேமுதிக தான் என்றும், ஊழலுக்கு துணை போகாத இந்த கட்சியில் உறுப்பினராக சேர, தங்களது ஆதார் கார்டுடன், தங்களது முழு விவரத்தினை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, உறுப்பினர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுமாறும், இந்த முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியம், மற்றும் நகரத்திலும், 7.4.2005 முதல் 21.4.2025 வரை நடைபெற இருப்பதால், அதற்கு ஏதுவாக புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் எனவும், பழைய உறுப்பினர்கள் தங்களது அடையாள அட்டையை புதுப்பித்து, புதிய அட்டையை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழகவைத் தலைவர் எல் முருகன், காவேரிப்பட்டினம் ஒன்றிய கழக செயலாளர் விஜய்வல்லரசு, ஒன்றிய துணைச் செயலாளர் பி.சி.குமார், மாவட்ட பிரதிநிதி சிலம்பரசன், மாவட்ட தொழிற்சங்க துணைச் செயலாளர் கேப்டன் வேலு, ஏரிக்கரை கிளைச் செயலாளர் மணியரசு, காமராஜ் நகர் கிளை செயலாளர் இளவரசன், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சதீஷ், கிளைக் கழக நிர்வாகி அருண், கழக உறுப்பினர் ஸ்ரீகாந்த், ஒன்றிய மகளிர் அணி துணை செயலாளர்களான சித்ரா, சசிகலா, ராணி, தேவயானி, சுந்தரம்மாள், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க காமராஜ் நகரில் உறுப்பினர் சேர்க்கை

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics