அரியலூர்,அக்;19
அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அதிமுக சார்பில் செயல் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி அரியலூர் – பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்குட்பட்ட செந்துறை வடக்கு அதிமுக ஒன்றியத்தின் சார்பில் ஆர்.எஸ்.மாத்தூரில் செயல் வீரர் மற்றும் வீராங்கனை ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக அவை தலைவர் (பொறுப்பாளர்) குழுமூர் செல்வம் ஏற்பாட்டில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை, இரா. தமிழ்ச்செல்வன் தலைமையிலும் மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை முன்னிலையிலும் நடைபெற்றது.
அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூட்டணியின் பலம் இல்லாமல் தனித்து ஆட்சி அமைத்த வரலாறு திமுக தலைவர் கருணாநிதி காலத்திலும் சரி தற்போது முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் காலத்திலும் கிடையாது எனவும் ஆனால் அதிமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த வரலாறு அதிமுகவிற்கு மட்டுமே உண்டு எனவும் மேலும் ஆண்ட கட்சியே தமிழகத்தில் மீண்டும் ஆண்ட பெருமை அதிமுகவிற்கு உண்டு எனவும் நம்முடைய இலக்கு 2026 இல் எடப்பாடியாரை முதலமைச்சர் ஆக்குவது நோக்கம் எனவும் எனவே அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, மாவட்ட ஜெயலலிதா (அம்மா) பேரவை செயலாளர் பொன்பரப்பி செந்தில்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சந்திரகாசன், செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் உதயம்.ரமேஷ், பெரியாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை, தளவாய் கிருஷ்ணன், இலைக்கடம்பூர் பழனிவேல், புதுப்பாளையம் ராதா, துளார் பரமசிவம், முன்னாள் ஒன்றிய செயலாளர் முள்ளுக்குறிச்சி சுரேஷ், மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத் குமார்