நித்திரவிளை , மார்- 12
நித்திரவிளை அருகே பூந்தோப்பு காலனியை சேர்ந்தவர் சுனில் (42).சென்னையில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்க்கிறார். இவர் குமரி மாவட்ட திமுக விளையாட்டு அணியின் துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
சம்பவ தினம் மனைவி பிள்ளைகளுடன் வீட்டில் இருக்கும் போது, ஒரு சொகுசு காரில் நன்கு பழக்கம் உடைய 4 பேர் வந்துள்ளனர். அவர்கள் வீட்டில் புகுந்து , சுனில் தங்கியிருக்கும் நிலத்தை மாமியார் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என கூறி தாக்கியுள்ளனர்.
சுனில் சத்தம் போடவே அவரது மனைவி பிள்ளைகள் வந்தவுடன், அந்த கும்பல் அனைவரையும் மிரட்டி விட்டு சென்றுள்ளனர். காயமடைந்த சுனில் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.