மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் தெருவில் மயிலாடுதுறையில் முதல் முறையாக நேஷனல் ஹைப்பர் மால் மற்றும் ஷாப்பிங் மால் நிறுவனத் தலைவர்கள் ஜாகிர் உசேன், மற்றும் ராஜா, தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் செல்வராஜ் , தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், சேப்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் மதியழகன், சங்க பேரவை தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை எம் என். ரவிச்சந்திரன், ஆர் .எஸ். கிருஷ்ணா உரிமையாளர் பாண்டுரங்கன் ,சீமாட்டி உரிமையாளர் முகமது ரியாஸ், உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வியாபாரத்தை தொடங்கி வைத்தனர்.



