இலந்தைகுளத்தில் தேவர் சிலைக்கு திமுக மாவட்ட கவுன்சில் மாலை அணிவித்து மரியாதை:- கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேவர் சிலைக்கு மாவட்ட கவுன்சில் பிரியா குரு ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேசியமும் தெய்வீகமும்தனது இரு கண்கள் என் வாழ்ந்து மறைந்த பசும் பொன் முத்து ராமலிங்கத்தேவரின் 117வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி வடக்கு இலந்தை குளத்தில் ஊர் பொதுமக்களின் சிறப்பு அழைப்பினை ஏற்று தேவர் சிலைக்கு மாவட்ட கவுன்சில் பிரியா குரு ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், அதனைத் தொடர்ந்து முளைப்பாரி மற்றும் பால் குடங்கள் எடுக்கும் நிகழ்வினை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடக்கி வைத்தார், இவ்விழாவில் கிராமத்துப் பெண்கள் மற்றும் இளைஞர்களால் முளைப்பாரி, மற்றும் பால் குடங்கள் எடுக்கப்பட்டு தேவரின் திருவுருவச் சிலைக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் வடக்கு இலந்த குளம் தேவர் அறக்கட்டளை முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஊர் நாட்டாமை தலைமை வகித்தனர், வடக்கு இலந்தகுளம் திமுக கிளை செயலாளர் சண்முகராஜ், முருகன், தெற்குஇலந்தகுளம் ஊர் நாட்டாமை திமுக கிளைச் செயலாளருமான ஆறுமுகம், திருமங்கலங்குறிச்சி செல்லத்துரை, பரமசிவம், ராஜாபுதுகுடி திமுக கிளை செயலாளர் சதீஷ்குமார், ஓலைகுளம் திமுக இளைஞரணி மணிகண்டன், கயத்தாறு சுரேஷ், மகேந்திரன், லோகேஷ் குமார், மற்றும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வடக்கு இலந்தை குளம் தேவர் அறக்கட்டளையை சேர்ந்த முருகன் செய்திருந்தார்..



