பொள்ளாச்சி செப்: 19
திமுக வின் பவள விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி 20 வது வார்டு பகுதியில் கழக கொடி ஏற்றியும் பொது மக்களுக்கு வேட்டி, சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி 20 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பாலமுருகன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர துணைச் செயலாளர் தர்மராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் நாச்சிமுத்து மற்றும் பாத்திமா அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஸ்வீட் நாகராஜ், இரும்பு சுப்பிரமணியம், வார்டு செயலாளர் போஜராஜன் வார்டு துணைச்செயலாளர் ஓ.எம்.எஸ் சக்தி அவை தலைவர் சண்முகம் வார்டு பிரதிநிதி கனகராஜ் மகளிர் அணி ரதி, பேச்சியம்மாள், ராமாத்தாள் வார்டு நிர்வாகிகள் மைக் வெள்ளியங்கிரி, ரவிக்குமார், சீனி, பிரகாஷ், சிங்கம் சக்தி, பைனான்ஸ் சக்திவேல், வழக்கறிஞர் அணி செந்தில் வார்டு நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.