தருமபுரி மே. 13
தருமபுரி நகர திமுக சார்பில் கழக அரசின் சாதனை விளக்க பொது கூட்டம் நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக சிறப்பு பேச்சாளர் இளங்கோவன் கழக அரசின் நான்காண்டு சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆ. மணி எம்பி, முன்னாள் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, நகர கழக செயலாளர் நாட்டான் மாது ,நகர கழக துணைச் செயலாளர் முல்லைவேந்தன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, ஒன்றிய செயலாளர்கள் டி. எல். காவேரி, சண்முகம் மற்றும் நிர்வாகிகள் கனகராஜ், ரவி, காசி விஸ்வநாதன், சுருளிராஜன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.