ராமநாதபுரம், மே 13 –
திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக சார்பில் கேணிக்கரை பகுதியில் நடந்தது. தெற்கு நகர் செயலாளர் மற்றும் நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 4 ஆண்டு சாதனைகள் குறித்து மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பேசினார்.
வடக்கு நகர் செயலாளர் கார்மேகம் (நகராட்சித் தலைவர்), தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமது தம்பி முன்னிலை வகித்தனர். தெற்கு நகர் அவைத்தலைவர் கோகுலமுருகானந்தம் வரவேற்றார்.
ஒன்றியச் செயலாளர் பிரபாகரன், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் இன்பா ரகு, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சம்பத்ராஜா, தெற்கு நகர் துணைச் செயலாளர்கள் நாகராஜன், பிரிட்டோ சக்கரவர்த்தி, சரிபா இப்ராஹீம், நகர் பொருளாளர் கண்ணன், அரசு வழக்கறிஞர் கார்த்திகை ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின் (எ) கமலக்கண்ணன், உள்பட பலர் பங்கேற்றனர். நாட்டுப்புற பாடகர் ஆக்காட்டி ஆறுமுகம் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. வார்டு செயலாளர் செல்வபிரகாஷ் நன்றி கூறினார்.



