தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அதகப்பாடி கிராமத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் ரூ.1,48,800/- மதிப்பீட்டில் அதியமான் குளம் தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி அவர்கள் துவக்கி வைத்தார். உடன் வேளாண்மை துணை இயக்குநர் ரா.ரத்தினம், உதவி பொறியாளர் ப.பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணிசத்யா ஆகியோர் உள்ளனர்.



