கன்னியாகுமரி:மார்ச் 30:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் கன்னியாகுமரியில் வைத்து நடைபெற்றது.
அறிவியல் பாடல் பாட மாவட்ட பொருளாளர் செல்ல தங்கம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்டத் தலைவர்
பேராசிரியர் நாகராஜன் தலைமை தாங்கினார.
மாவட்டச் செயலாளர் சிவ ஸ்ரீ ரமேஷ் செயலாளர் அறிக்கையை வாசித்தார். மாவட்ட பொருளாளர் செல்ல தங்கம் பொருளாளர் அறிக்கையை சமர்ப்பித்தார்.அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் ஒன்றிய செயல்பாடுகளை எடுத்துக் கூறினர்.
மாநில துணைத்தலைவர் சசிகுமார் மாநில முடிவுகள் குறித்து எடுத்துரைத்தார்.
மாநில செயலாளர் ஜெனிதா
துளிர் இல்லங்கள் பற்றியும் சமம் ஆரோக்கிய உபகுழுக்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகள் எடுத்துரைத்தார்.
காலநிலை மாற்றம் குறித்தும் வெப்ப அலைகளில் இருந்து
குழந்தைகளை முதியவர்களை நோயாளிகளை பாதுகாப்பது குறித்து பரப்புரை செய்வது,கருத்தரங்கம் நடத்துவது,
துளிர் திறனறிதல் தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும்
இம்மாத இறுதிக்குள் சான்றிதழ்களை வழங்குவது,
பஞ்சாயத்து அளவில் நடைபெறும் மலர் மாநாடுகளில்
வெப்ப அலைகள் குறித்து
கருத்துரை வழங்குவது,
உலக புத்தக தின நிகழ்வை
முன்னிட்டுநூறு இடங்களில்
வீட்டு நூலகம் உருவாக்குவது.
பத்து இடங்களில் இரவு வான் நோக்கு நிகழ்வுகளை நடத்துவது, கல்வியின் இன்றைய சூழல் குறித்து
கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்துவது,
உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
கன்னியாகுமரியில் இருந்து மேற்கு கடற்கரை சாலை வழியாக திருவனந்தபுரம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றிற்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக மாவட்டத் துணைத் தலைவர் டோமினிக் ராஜ் நன்றி கூறினார்.