தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் , தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.இராமச்சந்திரன் தலைமையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் பேசியதாவது
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள், பல்வேறு திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து தரப்பு மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறையின் மூலம் 67 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 107 பயனாளிகளுக்கு வரன்முறைபட்டா, 69 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் பட்டா, 38 பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு வழங்கப்படும் பட்டா, 147 பயனாளிகளுக்கு நகர நிலவரித்திட்ட பட்டா, 145 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் (உட்பிரிவுடையது), 588 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் (உட்பிரிவற்றது) என மொத்தம் 1161 பயனாளிகளுக்கு ரூ.1,35,33,700/- மதிப்பிலான பட்டாக்களையும், மாவட்ட தொழில் மையம் மூலம் 07 பயனாளிகளுக்கு வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் ரூ. 37 , 56, 815 /- மதிப்பிலான கடனுதவிகளையும், முதலமைச்சரின் விரிவானமருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 20 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளையும், கூட்டுறவுத் துறையின் மூலம் 02 பயனாளிகளுக்கு தொடக்கக் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல் சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் டிராக்டரினையும், 01 பயனாளிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் ஹார்வெஸ்ட்டரினையும், 01 பயனாளிக்கு செங்கோட்டை வட்டார சுய உதவி குழு கூட்டுறவு சங்கம் பதிவு சான்றிதழையும், ஒரு பயனாளிக்கு மகளிர் சுய உதவி குழு கடனுதவியும், ஒரு பயனாளிக்கு பயிர் கடனுதவியினையும், 01 பயனாளிக்கு கால்நடை பராமரிப்பு கடனுதவியும், 02 பயனாளிக்கு கிசான் கார்டுகளையும் என மொத்தம் 09 பயனாளிகளுக்கு ரூ.55.93,718/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,
தொழிலாளர் நலத்துறையின் மூலம் 01 பயனாளிகளுக்கு இயற்கை மரண உதவித்தொகையும், 02 பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகையினையும், 02 பயனாளிகளுக்கு நலவாரிய புதிய பதிவு அட்டைகளையும் என மொத்தம் 05 பயனாளிகளுக்கு ரூ.35,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2024-2025 இன் கீழ் 03 பயனாளிகளுக்கு வெங்காய பரப்பு விரிவாக்கம் விதைகளையும், 01 பயனாளிக்கு குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்கு ஆணையினையும், 01 பயனாளிக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் நறுமண பயிர்கள் பரப்பு விரிவாக்கம் விதைகளையும், என மொத்தம் 05 பயனாளிகளுக்கு ரூ.1,59,500/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சமூக நலத்துறை மூலம் 03 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1,50,000/- வைப்புத்தொகை பத்திரத்தினையும், வேளாண் பொறியியல் துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் இலவச போர்வெல் மற்றும் இலவச மின்சாரம் அமைத்தல் 2024-2025 (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்) க்கான பணி ஆணையினை 04 பயனாளிகளுக்கும் என மொத்தம் ரூ.32,00,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்கள் 09 நபர்களுக்கு ரூ.1,53,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத் துறையின் மூலம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் 2024-2025 திட்டத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு ஆத்தூர் கிச்சடி சம்பா நெல் விதைகளையும், 01 பயனாளிக்கு தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்தை பாதுகாப்பு இயக்கம் 2024-25 -இன் கீழ் திரவ உயிர் உரத்தினையும், 01 பயனாளிக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-2025 கீழ் உளுந்து விதைகளையும் என மொத்தம் 04 பயனாளிகளுக்கு ரூ1725/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சி துறை மூலம் 11 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் அனுமதி ஆணையினையும் என மொத்தம் ரூ.38,92,900/- மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும், தாட்கோ மூலம் 01 பயனாளிக்கு டிராக்டர் மானியம் மற்றும் 01 பயனாளிகளுக்கு தூய்மைப் பணியாளர் அட்டை என மொத்தம் 02 பயனாளிகளுக்கு ரூ.2,25,000/-மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 23 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 05 குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணைகளையும், 22 பயனாளிகளுக்கு புதிரை வண்ணார் நல வாரிய அடையாள அட்டைகளையும் என மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ.13,69,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் 1148 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், மகளிர் திட்டத்தின் மூலம் 06 பயனாளிகளுக்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான வங்கி பெருங்கடன்களையும், 113 பயனாளிகளுக்கு சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவிகளையும் என மொத்தம் 119 பயனாளிகளுக்கு ரூ.14,90,49,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 2438 பயனாளிகளுக்கு ரூ.19,11,19,358/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.இராமச்சந்திரன் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமிர்தலிங்கம், தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.