திண்டுக்கல் மாவட்டம் கேரம் சங்கம் மற்றும் பிரண்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்திய மாவட்ட கேரம் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆர்.எஸ். ரோட்டில் உள்ள கென்னடி பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் சீனியர் இரட்டை பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த பிலிப்ஸ், ஆனந்த்பிரபு ஆகியோர்களுக்கு சூழற்கோப்பையும் ரொக்க பரிசும் கேரம் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர். நாட்டாண்மை என்.எம்.பி. காஜாமைதீனும், திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத் தலைவர் ஜி. சுவாமிநாதன் இருவரும் இணைந்து வழங்கினார்கள். இந்நிகழ்வில் பிரண்ட்ஸ் கேரம் அகாடமி தலைவர் எம். முகமது அஜ்மீர் அலி, செயலாளர் எஸ்.அஸாருதீன், கேரம் மாவட்ட செயலாளர் பி.ஆல்வின் செல்வக்குமார், 36-வது வார்டு கவுன்சிலர் எம்.பெளமிதாபர்வீன், சங்க நிர்வாகிகள் ஏராளமான கேரம் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



